ராணுவ விமானத்தில் திருச்சி வந்த நீட் வினாத்தாள்! Trichy Insight
டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலம் 171 பெட்டிகளில் நீட் தேர்வு வினாத்தாள்கள் திருச்சி விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
June 18, 2026. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு குளறுபடிகளைத் தொடர்ந்து, வரும் ஜூன் 21 ஆம் தேதி மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்த முறை எந்தவொரு லீக்கேஜும் இல்லாமல், மிக ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை அதாவது NTA செம ஸ்ட்ரிக்ட்டான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு ராணுவ சிறப்பு விமானம் மூலமாக நீட் தேர்வு வினாத்தாள்கள் அதிரடியாக கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த மே 4 ஆம் தேதி நடந்த நீட் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக எழுந்த புகாரால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும். இதனால் இந்த முறை வினாத்தாள் விநியோகத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கையில் எடுத்துள்ளது மத்திய அரசு. டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமையின் தலைமையகத்தில் இருந்து அதீத பாதுகாப்புடன் பேக் செய்யப்பட்ட வினாத்தாள் பெட்டிகள், ராணுவ விமானம் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சி ஏர்போர்ட்டுக்கு செவ்வாய்க்கிழமை இந்த வினாத்தாள்கள் வந்து சேர்ந்தன.
மொத்தம் 171 இரும்புப் பெட்டிகளில் இந்த வினாத்தாள்கள் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ராணுவ விமானம் திருச்சி ரன்வேயில் தரையிறங்கியதுமே, விமான நிலைய வளாகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஏர்போர்ட் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகள் முன்னிலையில் இந்த 171 வினாத்தாள் பெட்டிகளும் மிக கவனமாக லாரிகளில் ஏற்றப்பட்டன. இந்த பெட்டிகள் அனைத்தும் ஜிபிஎஸ் டிராக்கிங் மற்றும் அதிநவீன சீல் வைக்கப்பட்ட கன்டெய்னர்கள் மூலமாக அந்தந்த மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த இந்த வினாத்தாள் பெட்டிகள், இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர் மற்றும் காரைக்கால் ஆகிய அண்டை மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களின் பாதுகாப்பு பெட்டகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திருச்சியின் முக்கிய மையங்களில் உள்ள வங்கி லாக்கர்கள் மற்றும் அரசு கருவூலங்களில் இந்த வினாத்தாள்கள் பத்திரப்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hashtags: #TrichyInsight #TrichyNews #NEET2026 #NEETExam #TrichyAirport #ArmyFlight #HighSecurity #TrichyUpdates #Thanjavur #Karur #Pudukottai #Ariyalur #Karaikal #NationalTestingAgency
Socials: Handles: @trichyinsight @trichyinsight