Lalgudi MLA Leema Rose Martin Office Opening | Trichy Insight

Lalgudi MLA Leema Rose Martin Office Opening | Trichy Insight

திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கியுள்ளார்.

ஜூன் 5, 2026: திருச்சி புறநகர் பகுதியான லால்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் நோக்கில், லால்குடி சந்தைப்பேட்டை பகுதியில் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி, நேற்று இந்த புதிய அலுவலகத்தின் திறப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என எக்கச்சக்கமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த புதிய சட்டமன்ற அலுவலகத்தை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் தலைமை அரசு கொறடாவுமான ஆர்.மனோகரன் முன்னிலையில், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் ரிப்பன் வெட்டி முறைப்படி திறந்து வைத்தார். இனிமேல் இந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் தங்களின் தொகுதி சார்ந்த குறைகள், மனுக்கள் மற்றும் தேவைகளை இந்த அலுவலகத்திற்கு நேரில் வந்து எம்.எல்.ஏ-விடம் எளிதாக வழங்கி தீர்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக திறப்பு விழாவை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தொகுதி மக்களின் மிக முக்கிய அத்தியாவசிய தேவையான தூய்மையான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தரும் வகையில் எம்.எல்.ஏ லீமாரோஸ் மார்ட்டின் அதிரடி நடவடிக்கை எடுத்தார். லால்குடி கீழ வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் வளாகம் மற்றும் மாந்துறையில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஆகிய இரண்டு முக்கிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை (RO Water System) தனது சொந்த நிதியில் இருந்து அவர் தொடங்கி வைத்தார். இந்த ஆர்.ஓ சிஸ்டம் மூலம் அந்த பகுதிக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இனி சுத்தமான குடிநீர் தடையின்றி கிடைக்கும்.

இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.எம்.பாலன், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளர் ஆர்.எஸ்.புல்லட் ஜான் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள் சூப்பர் நடேசன், வழக்கறிஞர் அசோகன், சிவகுமார், அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் நகர கழக செயலாளர் பொன்னி சேகர், பேரூர் கழக செயலாளர்கள் ஜேக்கப் அருள்ராஜ், ஜெய்சீலன், பிச்சப்பிள்ளை, மாவட்ட இளைஞரணி செயலாளர் அருண் நேரு, மகளிர் அணி மாவட்ட செயலாளர் செல்வமேரி ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

Hashtags: #TrichyInsight #TrichyNews #Lalgudi #MLAOffice #LeemaRoseMartin #AIADMK #ROWater #TrichyPolitics #LalgudiUpdates #PublicService #Tiruchirappalli #TNPolitics

Socials: Handles: @trichyinsight @trichyinsight