நவல்ப்பட்டு விஜி: திருவெறும்பூர் டிவி கே வெற்றி! அமைச்சராகும் வாய்ப்பு? | Trichy Insight

நவல்ப்பட்டு விஜி: திருவெறும்பூர் டிவி கே வெற்றி! அமைச்சராகும் வாய்ப்பு? | Trichy Insight

திருவெறும்பூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை வீழ்த்தி தமிழக வெற்றி கழகத்தின் நவல்ப்பட்டு விஜி மாபெரும் சாதனை படைத்துள்ள நிலையில், அவருக்கு அமைச்சரவையில் 'பவர்ஃபுல்' பதவி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

திருச்சியின் 'அதிரடிப்படை': ஜாம்பவானை வீழ்த்திய 40 ஆண்டுகால அனுபவம்!

திருச்சிராப்பள்ளி, மே 12, 2026:

திருச்சியின் அரசியல் வரைபடம் இன்று முற்றிலுமாக மாறியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 'விசில்' சத்தத்தில் அதிர, திருச்சியின் மிக முக்கியமான தொகுதியான திருவெறும்பூரில் ஒரு அரசியல் சுனாமி அடித்துள்ளது. திமுகவின் முக்கிய முகமும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, தமிழக வெற்றி கழகத்தின் நவல்ப்பட்டு விஜி (எ) விஜயகுமார் சுமார் 8,705 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

அரசியல் முதிர்ச்சியும்... சூழ்ச்சிகளை வீழ்த்திய லாவகமும்!

சுமார் 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட நவல்ப்பட்டு விஜி, களத்தில் எதிர்தரப்பு போடும் அரசியல் சூழ்ச்சிகளை மிகச் சாதாரணமாக "Left Hand"-ல் டீல் செய்யும் வல்லமை கொண்டவர். மண்ணின் மைந்தராக, எளிமையான மனிதராக மக்களிடையே வலம் வரும் இவர், திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட திருவெறும்பூரை ஒரு புதிய மாற்றத்தை நோக்கித் திருப்பியுள்ளார்.

கல்விப் பணி: ஏழை மாணவர்களின் கல்விக்குத் தாராளமாக உதவும் குணம்.

விளையாட்டு ஆர்வம்: திருச்சி இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதில் முன்னோடி.

ஆன்மீகம்: கோயில் சீரமைப்புப் பணிகளில் பெரும் பங்கு.

மினிஸ்ட்ரியில் இடம் கிடைத்தால் அது 'அதிரடிப்படை' தான்!

தற்போது தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், திருச்சியின் ஒரு மூத்த அமைச்சரையே தோற்கடித்த நவல்ப்பட்டு விஜிக்கு புதிய அமைச்சரவையில் மிக முக்கியமான "Portfolio" வழங்கப்படும் என பலத்த பேச்சு அடிபடுகிறது.

திருச்சியில் டிவி கே 6 இடங்களை முழுமையாகக் கைப்பற்றி மாஸ் காட்டியுள்ளது. இதில் நவல்ப்பட்டு விஜி அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தால், அது திருச்சியின் வளர்ச்சிக்கு ஒரு 'அதிரடிப்படை'யாக அமையும் என்பது அரசியல் விமர்சகர்களின் கணிப்பு. அதிகார வர்க்கத்தின் மெத்தனப் போக்கை மாற்றி, தொகுதிப் பிரச்சனைகளான குடிநீர் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மின்னல் வேகத்தில் நிறைவேற்ற இவர் அமைச்சராக வருவது அவசியம் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Hashtags: #TrichyInsight #NavalpattuViji #TVK #ThiruverumburVictory #AdhiradiPadai #VijayPolitics #TrichyPolitics #MassVictory #MinisterViji