பெரம்பலூர் குழந்தை கொலை வழக்கு கள்ளக்காதலன் கைது | Trichy Insight

பெரம்பலூர் குழந்தை கொலை வழக்கு கள்ளக்காதலன் கைது | Trichy Insight

பெரம்பலூர் காரை சமத்துவபுரத்தில் கள்ளக்காதலனுடன் வாழத் தடையாக இருந்த 5 வயது மகள் கீர்த்திஷாவை கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் மணிவண்ணனை பாடாலூர் போலீஸார் கைது செய்தனர்.

ஜூன் 16, 2026 அன்று பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி நிஷாந்தி. இந்தத் தம்பதியினருக்கு கீர்த்திஷா என்ற ஐந்து வயது பெண் குழந்தை இருந்தது. கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்து வருடங்களாக குணசேகரனைப் பிரிந்து நிஷாந்தி தனது குழந்தையுடன் காரை சமத்துவபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். அப்போது பெரம்பலூரில் உள்ள கட்டுமான தொழிலாளர் சங்க அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த நிஷாந்திக்கு, அங்கு வேலை செய்த மணிவண்ணன் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதற்கிடையே கள்ளக்காதலன் மணிவண்ணன், நிஷாந்தியிடம் குழந்தையை அவளது தந்தையிடம் விட்டுவிட்டு தன்னுடம் தனியாக வரும்படி கூறித் தொடர்ந்து வற்புறுத்தி கடுமையான தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் குழந்தையை குணசேகரனிடம் அனுப்ப நிஷாந்திக்கு விருப்பம் இல்லாததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழத் தடையாக இருக்கும் சொந்த மகளையே தீர்த்துக்கட்ட நிஷாந்தி துணிந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குழந்தை சாப்பிட்டுவிட்டுத் தூங்கிய போது, நிஷாந்தி அசுரத்தனமாகத் தன் மகளின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதாகக் கூறி நாடகமாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் அவள் ஏற்கனவே கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துவிட்டதை உறுதி செய்து பாடாலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து பாடாலூர் போலீஸார் கீர்த்திஷாவின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நிஷாந்தியின் தாய்மாமன் லோகநாதன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பெத்த தாயான நிஷாந்தியை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் நிஷாந்தியைத் தூண்டிவிட்டு கொலைக்குக் காரணமாக இருந்துவிட்டுத் தலைமறைவாக ஓடிய கள்ளக்காதலன் மணிவண்ணனைப் பிடிக்கப் போலீஸார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் ரகசியமாகப் பதுங்கியிருந்த கள்ளக்காதலன் மணிவண்ணனை பாடாலூர் போலீஸார் நேற்று திங்கள் கிழமை இரவு அதிரடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். கள்ளக்காதல் மோகத்தால் ஐந்து வயதுக் குழந்தை படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தாய் மற்றும் அவளது கள்ளக்காதலன் இருவரும் அடுத்தடுத்து பிடிபட்டிருப்பது பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #PerambalurCrime #MurderCase #LoverArrested #PadalurPolice #Samathuvapuram #CrimeAlert #ChildSafety #TrichyUpdates #TamilNews #BreakingNews

Socials: @trichyinsight @trichyinsight