திருச்சியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம் | Trichy Insight

திருச்சியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம் | Trichy Insight

திருச்சி அழகிரிபுரம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு அதிரடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

June 20, 2026. திருச்சி அழகிரிபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பொதுமக்கள், குறிப்பா பெண்கள் மத்தியில ஒரு பெரிய கொந்தளிப்பு நிலவி வந்தது. அதுக்கு காரணம் அந்தப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுக்கடை தான். இந்த கடையால் அந்த வழியா போற பள்ளி மாணவிகளுக்கும், பெண்களுக்கும் தினசரி ஏகப்பட்ட தொந்தரவுகள் ஏற்பட்டு வந்த நிலையில, பொறுத்து பொறுத்து பார்த்த அப்பகுதி பெண்கள் இப்போ அதிரடியா களத்துல இறங்கி போராட ஆரம்பிச்சிருக்காங்க.

இந்த டாஸ்மாக் கடைக்கு வர்ற குடிமகன்கள், கடைக்கு பக்கத்துலேயே பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்குற வகையில மது அருந்துவது, ஆபாச வார்த்தைகளால் பேசுவது என அராஜகம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழித்தடத்தில் தான் பள்ளி செல்லும் சிறுமிகளும், வேலைக்குச் செல்லும் பெண்களும் நடந்து போக வேண்டியுள்ளது. குடிமகன்களின் இந்த அநாகரிகமான செயலால் அந்தப் பகுதியில் ஒரு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருக்கிறது. இதனால் பயந்துபோன பெண்கள் அந்தப் பாதையில் தனியாகச் செல்லவே நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எங்கள் பகுதியின் நிம்மதியே இந்த கடையால் போச்சு, இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக இங்கிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கடைக்கு மிக அருகிலேயே பள்ளி மற்றும் பேருந்து நிறுத்தம் இருப்பதால், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். பெண்களின் இந்த திடீர் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஞானாமிர்தம் அவர்கள் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எப்போது இந்த டாஸ்மாக் கடையை மூடுவீர்கள் என்று பெண்கள் போலீசாரை நோக்கி சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இந்த போராட்டத்தின் போது ஆவேசமாக கோஷமிட்ட ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டது. உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கடை மூடப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என பெண்கள் உறுதியாக நின்றதால் அந்த இடமே இப்போதைக்கு பரபரப்பாக காட்சியளிக்கிறது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyTasmacProtest #Alagipuram #TasmacProtest #WomenProtest #NammaTrichy #TrichyUpdate #TrichyPolice #LocalNewsTrichy #TrichyDistrict #SocialIssue

Socials: Handles: @trichyinsight @trichyinsight