Trichy Atchaya Case Dharmarajan Jose Arrested | Trichy Insight
திருச்சியில் பியூட்டிஷியன் அட்சயா மசாஜ் சென்டர் நெட்வொர்க்கில் சிக்கி கள்ளக்காதலில் ஈடுபட்டதும், ஆத்திரத்தில் கணவர் தர்மராஜன் அவரது முகத்தை கத்தியால் கிழித்துவிட்டு குழந்தையுடன் தப்பிய முழு பின்னணியும் அம்பலமாகியுள்ளது.
ஜூன் 5, 2026: திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் பியூட்டிஷியன் அட்சயா மற்றும் தர்மராஜன் விவகாரத்தில், தற்போது மசாஜ் சென்டர் நெட்வொர்க் மற்றும் கடத்தல் மாஃபியாக்கள் சம்பந்தப்பட்ட பல திடுக்கிடும் ரகசியங்கள் போலீஸ் விசாரணையில் வெளிவந்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியெடுத்துள்ளது. ஆரம்பத்தில் கணவர் தர்மராஜன் தனது 4 வயது பச்சிளம் குழந்தை ஆத்விக் உடன் தற்கொலை செய்யப்போவதாக கண்ணீருடன் வெளியிட்ட வீடியோவை பார்த்துப் பரிதாபப்பட்ட பொதுமக்களுக்கு, அதன் பின்னணியில் இருக்கும் நிஜமான ரத்தக் கறை படிந்த துரோக வரலாறு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒட்டுமொத்த விவகாரத்தின் ஆரம்பப் புள்ளியைத் தேடிப் போனால், கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று இருவீட்டு சம்மதத்துடன் ராஜா என்ற தர்மராஜனுக்கும் அட்சயாவுக்கும் காதல் திருமணம் நடந்துள்ளது. தர்மராஜன் சொந்தமாக டிரைவர் தொழில் செய்து குடும்பத்தைக் கவனித்து வந்துள்ளார். நன்றாகச் சென்று கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில், அட்சயா தனது தோழிகளுடன் சேர்ந்து பியூட்டிஷியன் படிப்பு படிக்கச் சென்ற பிறகுதான் புயல் வீசத் தொடங்கினது. படிப்பு முடிந்ததும், திருச்சி தில்லை நகரில் உள்ள பிரபல டிரெண்ட்மி சலூனில் தான் வேலை பார்ப்பதாக அட்சயா தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆனால், போலீஸாரின் தற்போதைய ரகசிய விசாரணையில் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. திருச்சியில் பியூட்டிஷியன் படிக்கும் பல பெண்கள் தில்லை நகரில் உள்ள 5 முதல் 10 பார்லர்களில் வேலை பார்ப்பதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு, அந்த பார்லர் ஓனர்களின் நெட்வொர்க் மூலம் சட்டவிரோத மசாஜ் சென்டர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தெரிந்தது.
இந்த மோசடி நெட்வொர்க் மூலமாகத்தான் அட்சயாவுக்கு, ஜோஷ் என்ற நபரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இந்த ஜோஸின் முழுநேரப் பொழப்பே, குடும்பப் பெண்களை ஆசை வார்த்தை கூறி மயக்கி, அவர்களைத் தனது வலையில் வீழ்த்தி பணம் சம்பாதிப்பதுதான் எனக் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. ஜோஸுடன் ஏற்பட்ட நட்பு ஓரிரு நாட்களிலேயே அடுத்த கட்டத்திற்குச் செல்ல, அட்சயாவின் நடத்தையில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து சந்தேகமடைந்த கணவர் தர்மராஜன், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே இவர்களைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட நெருக்கமான வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வந்தது. தன் குழந்தையின் எதிர்காலம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக தர்மராஜன் கடந்த 2025 மே மாதம் முதல் தனது மனைவியிடம் கள்ளக்காதலைக் கைவிடுமாறு காலில் விழாத குறையாகப் பலமுறை கெஞ்சியுள்ளார். ஆனால், அட்சயா எதையும் காதில் வாங்காமல் வெளிப்படையாகவே ஜோஸுடன் கள்ளத்தொடர்பைத் தொடர்ந்துள்ளார்.
இந்த சூழலில் கடும் விரக்தியடைந்த தர்மராஜன், ஜோஸை நேரில் சந்தித்து எச்சரிக்க முயன்றுள்ளார். ஆனால், பணபலம் மிக்க ஜோஸ், திருச்சியில் பிரபல டான்ஸ் கிளாஸ் நடத்தி வரும் தனது செல்வாக்குமிக்க நண்பரை வைத்து தர்மராஜனுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த தர்மராஜன், கடந்த ஜூன் 3 அன்று அட்சயாவிடம் இதுகுறித்து நியாயம் கேட்டுள்ளார். அப்போது அட்சயா மிகவும் திமிராகவும் கணவரை அசிங்கப்படுத்தும் வகையிலும் பேசியதாகத் தெரிகிறது. இதில் ஆத்திரத்தின் உச்சகட்டத்திற்குச் சென்ற தர்மராஜன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அட்சயாவுக்கு அழகுதானே எல்லாவற்றிற்கும் காரணம் என்ற வெறியில் அவரது முகத்திலேயே சரமாரியாகக் குத்திக் கிழித்துச் சிதைத்துள்ளார்.
மனைவி ரத்த வெள்ளத்தில் அலற, தர்மராஜன் தனது 4 வயது மகன் ஆத்விக்ஐ தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். தப்பிச் செல்லும் வழியில்தான், தான் குழந்தையுடன் தற்கொலை செய்யப்போவதாக வீடியோவை வெளியிட்டு சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பினார். இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து தனிப்படை அமைத்துத் தேடி வந்த திருச்சி போலீஸார், நேற்று மதியம் 1:45 மணியளவில் தர்மராஜனை அதிரடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். மீட்கப்பட்ட 4 வயது மகன் ஆத்விக் தற்போது அவனது தந்தைவழி உறவினர்களின் பாதுகாப்பான கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளான். அதே நேரத்தில், இந்த விபரீதங்கள் அனைத்திற்கும் காரணமான கள்ளக்காதலன் ஜோஸை தனிப்படை போலீஸார் நேற்று இரவு 9:30 மணியளவில் கஸ்டடியில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கத்தியால் முகம் கிழிக்கப்பட்ட அட்சயா தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் சுயநினைவுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyCrime #AtchayaJose #ThillaiNagar #TrichyPolice #Arrested #MassageCenterScam #FamilyDispute #CrimeUpdatesTamil #TrendingTamil #TrichyUpdates
Socials: Handles: @trichyinsight @trichyinsight