Trichy Bakrid Prayer Timings 2026 Mosque List | Trichy Insight

Trichy Bakrid Prayer Timings 2026 Mosque List | Trichy Insight

திருச்சியில் உள்ள முக்கிய பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா மைதானங்களில் 2026 ஆம் ஆண்டு பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெறும் நேரங்கள் குறித்த முழு விபரம் வெளியாகியுள்ளது.

மே 28, 2026. தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு திருச்சி மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள், ஈத்கா மைதானங்களில் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன. இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி, பெருநாள் தொழுகையில் கலந்து கொள்வதற்காக திருச்சியின் முக்கிய ஜமாஅத்கள் சார்பில் தொழுகை நேரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாலையில் தொடங்கி காலை 9 மணி வரை வெவ்வேறு நேரங்களில் இந்த சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட உள்ளன.

முதற்கட்டமாக காலை 6.30 மணிக்கு குமந்தான் மஸ்ஜித், தஞ்சை ரோடு பூக்கொல்லை, துருப்பு பள்ளி மற்றும் ஜங்ஷன் பள்ளி ஆகிய இடங்களில் பக்ரீத் தொழுகை துவங்குகிறது. இதனைத் தொடர்ந்து காலை 6.45 மணிக்கு இலாஹி பள்ளி, விஸ்வாஸ் நகர் மற்றும் பூக்கொல்லை முஹம்மதிய்யா பள்ளி ஆகியவற்றில் தொழுகை நடைபெறும். காலை 7.00 மணிக்கு ஜியாபுரம் ஜும்மா பள்ளி, தென்னூர் ஹைரோடு, சமஸ்யிரான் பள்ளி, கே.கே நகர் நூருல் ஹுதா முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் மற்றும் சத்திரம் பகுதியில் உள்ள முஹம்மது (ஸல்) மஸ்ஜித் ஆகியவற்றில் தொழுகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் காலை 7.15 மணிக்கு இச்சிக்காமலைப்பட்டி அல் மஸ்ஜிதுல் ஹஹ்ரயேன் பள்ளிவாசலிலும், காலை 7.20 மணிக்கு அன்வாருல் உலூமிலும் தொழுகை நடைபெறும்.

காலை 7.30 மணி என்பது பல முக்கிய பள்ளிவாசல்களில் தொழுகைக்கான நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி உறையூர், முருங்கப்பேட்டை ஜாமிஆ பள்ளி, கோரிமேடு முஹம்மது (ஸல்) பள்ளிவாசல், முத்தரசநல்லூர் மஸ்ஜிதே ஜன்னத்துன் நூர், அலி திவான், ரஹ்மானியபுரம், பேகம்சாஹிபா மஸ்ஜிது, அமீர் மஸ்ஜிது, ஹசன்பாக் மஸ்ஜிது, குறிஞ்சி நகர் மஸ்ஜிதே அஹ்மது பள்ளிவாசல், கிராப்பட்டி ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் சேக் இஸ்மாயில் சுபேதார் பள்ளிவாசல் ஆகியவற்றில் இந்த நேரத்தில் தொழுகை தொடங்கும். தொடர்ந்து காலை 7.45 மணிக்கு ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாஃபி பள்ளி, மஸ்ஹர் அலி ஷா பள்ளிவாசல் மற்றும் உறையூர் பங்காளி தெரு பள்ளிவாசலில் தொழுகை நடைபெறும்.

காலை 8.00 மணிக்கு முஹம்மதியா மஸ்ஜிது சஷக், இக்பால் காலனி பள்ளி வாசல், தென்னூர் ரெஜிமெண்ட் பஜார் பள்ளிவாசல், காஜா பேட்டை, சண்முகா நகர் மஸ்ஜித் அல் முஹம்மதியா, ஆசாத் நகர் மஸ்ஜிதே மினா, எ. புதூர் நத்தர் நகர் பள்ளிவாசல் மற்றும் ஆழ்வார் தோப்பு மதினா பள்ளி வாசல் ஆகிய இடங்களில் பெருநாள் தொழுகை ஆரம்பமாகும். இறுதி கட்டமாக காலை 8.15 மணிக்கு காஜா பள்ளியிலும், காலை 8.30 மணிக்கு துரைசாமி புரத்திலும், மிக முக்கியமாக காலை 9.00 மணிக்கு கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள பிரதான ஈத்கா மைதானத்திலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது. திருச்சி மாவட்ட மக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள பள்ளிவாசல்களின் நேரத்தை அறிந்து கொண்டு பெருநாள் தொழுகையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Hashtags: #TrichyInsight #TrichyNews #Bakrid2026 #EidAlAdha #TrichyMosque #EidPrayerTimings #TrichyUpdates #TrichyJunction #KKNagar #Uraiyur #Tennur #TrichyLocalNews

Socials: Handles

@trichyinsight @trichyinsight