சித்தி வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது | Trichy Insight

சித்தி வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது | Trichy Insight

திருச்சியில் ஆதரவு கொடுத்த சித்தி வீட்டிலேயே 38 கிராம் நகைகளை திருடி நண்பர்களுடன் சேர்ந்து விற்ற சிறுவன் உட்பட 3 பேர் சிக்கினர்.

May 3, 2026. திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் அழகுராணி. இவருடைய அக்கா மகன் ஒரு 16 வயது சிறுவன். அந்த சிறுவன் தனது பெற்றோரை இழந்த நிலையில் சித்தியான அழகுராணி தான் அவனுக்கு அடைக்கலம் கொடுத்து தனது வீட்டிலேயே வைத்து வளர்த்து வந்திருக்கிறார். ஆனால் வளர்த்த கடாவே மார்பில் பாய்ந்தது போல அந்த சிறுவன் செய்த காரியம் தான் இப்போது அந்த பகுதியில் பெரிய பேச்சாக இருக்கிறது.

கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோவில் இருந்த 38 கிராம் தங்க நகைகளை அந்த சிறுவன் திருடிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டான். இது குறித்து அழகுராணி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த சிறுவன் தனது நண்பர்களான புத்தூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த தினேஷ் மற்றும் கல்லாங்காடு பகுதியை சேர்ந்த விஜய் ஆகியோருடன் சேர்ந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

திருடிய நகைகளை இவர்கள் வெளியில் விற்று பணமாக்க முயற்சி செய்துள்ளனர். போலீசார் துரிதமாக செயல்பட்டு இவர்கள் மூவரையும் வெள்ளிக்கிழமை அன்று அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 33 கிராம் தங்க நகைகளை போலீசார் பத்திரமாக மீட்டெடுத்தனர். மீதமுள்ள நகைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் 16 வயது சிறுவன் என்பதால் அவன் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டான். ஆனால் அவனுக்கு உடந்தையாக இருந்த தினேஷ் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆதரவு கொடுத்த குடும்பத்திலேயே கைவரிசை காட்டிய இந்த சம்பவம் புத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyCrime #Puthur #JewelryTheft #GoldRecovery #TrichyCity #LocalNews #TamilNews #CrimeAlert #PoliceAction #TrichyUpdate

Socials: Handles: @trichyinsight @trichynews