திருச்சி கலெக்டர் பெயரில் ஆன்லைன் மோசடி: உஷார் மக்களே! | Trichy Insight
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதிக் தயாள் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி, மலிவு விலையில் பர்னிச்சர் தருவதாக கூறி ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை காட்டி வருகிறது.
2026 ஜூலை 4. திருச்சி சிட்டி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஆன்லைன் மோசடி கும்பல்களின் ஆட்டம் நாளுக்கு நாள் ரொம்பவே அதிகரித்து வருகிறது. இவர்களின் புதுப்புது நூதன உத்திகளால் பொதுமக்கள் தொடர்ந்து தங்களின் பணத்தை இழந்து வருகிறார்கள். அந்த வரிசையில், இப்போது திருச்சியின் தற்போதைய மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் ஐஏஎஸ் பெயரிலேயே போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி ஆன்லைன் மோசடி கும்பல் ஒன்று மிகப்பெரிய வலையை விரித்துள்ளது ஒட்டுமொத்த திருச்சி நிர்வாகத்தையே அதிர வைத்துள்ளது. கலெக்டரின் அதிகாரப்பூர்வ புகைப்படம் மற்றும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இலச்சினையைப் பயன்படுத்தி இந்த போலி கணக்கை உருவாக்கியுள்ளனர்.
அந்தப் போலி ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து திருச்சியைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஒருவரின் கணக்கிற்கு திடீரென மெசேஜ் வந்துள்ளது. அதில், "எனக்கு மிக நெருக்கமான சிஆர்பிஎஃப் (CRPF) போலீஸ் அதிகாரி ஒருவர் திடீரென பணியிட மாறுதல் பெற்று வேறு ஊருக்குச் செல்கிறார். அதனால், அவர் வீட்டில் பயன்படுத்திய சோபா, கட்டில் போன்ற விலை உயர்ந்த பர்னிச்சர் பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு விற்க ஆசைப்படுகிறார். உங்களுக்குத் தேவைப்பட்டால் நான் உடனே பேசி முடித்துத் தருகிறேன்" என்று கலெக்டர் பேசுவது போலவே ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளது அந்த மோசடிக் கும்பல். ஆனால், சற்றே உஷாரான அந்தப் பத்திரிகையாளர், இது போலி கணக்கு என்பதை சட்டெனக் கண்டுபிடித்து அந்தப் பக்கத்தை உடனே பிளாக் செய்துவிட்டு தப்பியுள்ளார்.
ஆனாலும் திருச்சியில் இந்த மாதிரியான மோசடிகள் நடப்பது இது முதன்முறையல்ல. கடந்த ஆண்டிலும் இதே பாணியில் திருச்சியைச் சேர்ந்த சீனியர் பத்திரிகையாளர் ஒருவருக்கு, அவரது நட்புப் பட்டியலில் இருந்த உயர் போலீஸ் அதிகாரி பெயரில் ஒரு லிங்க் வந்துள்ளது. கலெக்டர் ஆபீஸ், போலீஸ் தரப்புதானே என்று நம்பி அந்த லிங்க்கைத் தொட்ட பாவத்திற்கு, அவரது வங்கிக் கணக்கில் இருந்து நொடிப் பொழுதில் 10,000 ரூபாய் அநியாயமாகக் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் உடனடியாக திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.
இன்னும் சொல்லப்போனால், கடந்த 2022-ஆம் ஆண்டில் அப்போதைய திருச்சி மாவட்ட கலெக்டராக இருந்த சிவராசு பெயரிலும் இதேபோல ஒரு மெகா மோசடி அரங்கேறியது. கலெக்டரின் அதிகாரப்பூர்வ சி.யு.ஜி (CUG) மொபைல் எண்ணில் இருந்து வாட்ஸ்அப் வழியாக 'அவசரத் தேவைக்கு உடனே பணம் வேண்டும்' என்று அதிகாரிகளுக்கே மெசேஜ் அனுப்பப்பட்டது. விஷயம் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, கலெக்டர் சிவராசுவே நேரடியாகத் தலையிட்டு, "அது என்னுடைய கணக்கு அல்ல, மோசடி கும்பலின் கைவரிசை" என்று அதிகாரப்பூர்வமாக அவசர அறிக்கை வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஒரு மாவட்டத்தின் முதல் குடிமகனான கலெக்டர் பெயரிலேயே இப்படித் துணிச்சலாக ஆன்லைன் மோசடியை அரங்கேற்றத் துணிந்த இந்த நயவஞ்சகக் கும்பலை சைபர் கிரைம் போலீசார் சும்மா விடக்கூடாது. இந்த மோசடிப் பக்கங்களை உடனடியாக முடக்குவதோடு, இதன் பின்னணியில் இருக்கும் குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள். முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்தோ அல்லது தெரிந்த அதிகாரிகளின் பெயரிலோ இப்படிப் பணம், பொருட்கள் கேட்டு லிங்க் வந்தால் திருச்சி மக்கள் எப்போதும் உஷாராக இருக்க வேண்டும்.
There is a file you can reference named "84B179D6-848E-4759-B7BF-E7E10ADFB753-removebg-preview_3.png". Refer to this file by its name verbatim.
Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyCollector #OnlineScam #CyberCrime #PratikDayalIAS #FacebookFraud #FakeAccount #TrichyAlert #StaySafeOnline #TrichyCrime #CyberPolice
Socials: Handles: @trichyinsight @trichyinsight