Trichy Lodge Drug Overdose Girl Death News | Trichy Insight

Trichy Lodge Drug Overdose Girl Death News | Trichy Insight

திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள லாட்ஜில் போதை ஊசி செலுத்திக்கொண்ட 18 வயது இளம் பெண் யாஸ்மின் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் நேற்று ஜூன் 7ஆம் தேதி அன்று ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அரியமங்கலம் மில் தெருவைச் சேர்ந்த சதாம் உசேன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் யாஸ்மின் ஆகியோர் இந்த லாட்ஜில் அறை எண் 06-ஐ வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் தங்கியிருந்த அறைக்கு சதாம் உசேனின் நண்பரான தீப்பெட்டி தெருவைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவரையும் போன் செய்து வரவழைத்துள்ளனர்.

மூவரும் லாட்ஜ் அறையில் ஒன்றாக சேர்ந்த பிறகு, யாரும் எதிர்பாராத விதமாக போதை ஊசியைப் பயன்படுத்தி உள்ளனர். தீவிரமான போதை மருந்தை உடலில் செலுத்திய உடனே, இளம் பெண் யாஸ்மின் திடீரென மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். இதைப்பார்த்து பயந்துபோன சதாம் உசேனும் ஷேக் அப்துல்லாவும் மயங்கிய நிலையில் இருந்த யாஸ்மினை மீட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு யாஸ்மினை தீவிரமாக பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள், அவர் ஏற்கனவே சுயநினைவின்றி இறந்துவிட்டதாக அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து யாஸ்மினின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக லாட்ஜிற்குச் சென்று சோதனை நடத்தியதில் அங்கு சுமார் 70 போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசி செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சிரஞ்ச் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக முயன்ற சதாம் உசேன் மற்றும் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரையும் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், இறந்த யாஸ்மினின் தாயார் சகிலா பேகம் அந்த பகுதியில் போதை மாத்திரைகளை சட்டவிரோதமாக வாங்கி வந்துள்ளார் என்பதும், அவரிடமிருந்துதான் யாஸ்மின் இந்த போதை மாத்திரைகளை எடுத்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு இவ்வளவு போதை மாத்திரைகள் எப்படி கிடைத்தது என்பது குறித்து திருச்சி மாநகர துணை ஆணையர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Hashtags: #TrichyInsight #TrichyNews #Trichy #CrimeNews #DrugAwareness #TrichyLodge #Ariyamangalam #TrichyCity #BreakingNews #TamilNews #YouthAwareness #SayNoToDrugs

Socials: Handles: @trichyinsight @trichyinsight