Trichy NSB Road Street Vendors Association Scam | Trichy Insight

Trichy NSB Road Street Vendors Association Scam | Trichy Insight

திருச்சி NSB ரோடு கடைகள் இடமாற்றத்தில் சங்கங்களை வைத்து அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் பல லட்சம் ஊழல் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஏழை வியாபாரிகள் கண்ணீருடன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.

June 12, 2026. திருச்சி மாநகரத்தின் மிக முக்கிய வணிகப் பகுதியான NSB ரோடில் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு 124 நடைபாதை கடைகள் அகற்றப்பட்ட விவகாரம் இப்போ ஒரு பெரிய அரசியல் மற்றும் நிர்வாக ஊழல் விஸ்வரூபமாக மாறியிருக்கிறது. டிராபிக் குறையும், பொதுமக்கள் நிம்மதியாக நடக்கலாம் என்று பாராட்டப்பட்ட இந்த திட்டத்தின் பின்னணியில், பல வருடங்களாக அங்கு நேர்மையாக தொழில் செய்து வந்த ஏழை எளிய சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் மிகக் கொடூரமான முறையில் பறிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அராஜகம் பண்ணுறதே இந்த மாநகராட்சி தான் என்று பஜார் வட்டாரத்தில் வியாபாரிகள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட உண்மையான வியாபாரிகள் தரப்பில் இருந்து வந்துள்ள புகார்களின்படி, இந்த மாற்று இட ஒதுக்கீட்டில் சில வியாபார சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இடைத்தரகர்களாக செயல்பட்டு அதிகாரிகளுடன் கைகோர்த்து மிகப்பெரிய விலைபேசலில் ஈடுபட்டுள்ளனர். தலா ஒரு கடைக்கு பல லட்சம் ரூபாய் வரை கைமாறியுள்ளதோடு மட்டுமில்லாமல், ஒவ்வொரு சங்கத்திலும் உள்ள முக்கிய புள்ளிகள் தங்களின் சொந்த குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் தங்களுக்கு நெருக்கமான நண்பர்களின் பெயர்களில் போலியாக கணக்கு காட்டி புதிய மாற்று இடங்களில் கடைகளை அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து வாங்கியுள்ளனர் என்ற அதிர வைக்கும் உண்மை அம்பலமாகியுள்ளது.

இதன் காரணமாக, தங்களின் வாழ்வாதாரத்தை நம்பி தலைமுறை தலைமுறையாக பஜாரில் வெயிலிலும் मழையிலும் கஷ்டப்பட்டு நேர்மையாக தொழில் செய்து வந்த உண்மையான பஜார் வியாபாரிகள் தங்களுக்கு கடை கிடைக்காமல் இப்போ வாழ்வாதாரத்தை இழந்து நடுரோட்டில் நிற்கிறார்கள். சொந்தமாக தொழில் செய்து வந்த முதலாளிகள் பலர், இப்போ சாப்பாட்டுக்கே வழியில்லாமல் புதிய இடங்களில் கடைகளை வளைத்துப்போட்ட பணக்கார இடைத்தரகர்களிடம் தினசரி கூலிக்கு வேலைக்கு நிற்கும் அவல நிலை திருச்சியில் அரங்கேறியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, தரைகடைகள் மற்றும் சாலையோர கடைகளை அப்புறப்படுத்திய திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக மிக அராஜகமான முறையில் நடந்துகொள்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சைக்கிள்களில் மற்றும் தள்ளுவண்டிகளில் பழங்கள் வியாபாரம் செய்து வரும் ஏழை சிறுவியாபாரிகளின் பழக்கூடைகள், தராசுகள் மற்றும் எடைக்கற்களை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக பிடுங்கி, பலவந்தமாக குப்பை லாரிகளில் கொட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். அன்றாட பிழைப்பு நடத்தும் அந்த ஏழை வியாபாரிகளிடமும் இதே பாணியில் மாற்று இடம் தருவதாக சொல்லி ஏமாற்றி, காலத்தை கடத்தி அராஜகம் செய்து வருவதாக பஜார் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyNSBRoad #Teppakulam #TrichyCorporation #ScamAllegation #TrichyVendors #BazaarIssue #EvictionDrive #NammaTrichy #TrichyUpdate #LocalNews

Socials: Handles

@trichyinsight @trichyinsight