Trichy Pending 6 Tasmac Shops Closure List | Trichy Insight

Trichy Pending 6 Tasmac Shops Closure List | Trichy Insight

திருச்சியில் அரசு அறிவித்த 16 கடைகளில் 10 கடைகள் மூடப்பட்ட நிலையில், மீதமுள்ள 6 இடங்களுக்கான முன்னுரிமை பட்டியலில் எந்தெந்த கடைகள் வர வேண்டும் என்று நம்ம பேஜ் ஃபாலோயர்ஸ் அதிரடி லிஸ்ட் கொடுத்துள்ளனர்.

18 May 2026 அன்று திருச்சி மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்தான விவாதம் நம்ம திருச்சி இன்சைட் பக்கத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் திருச்சியில் உள்ள 16 சர்ச்சைக்குரிய டாஸ்மாக் கடைகளை மூடப்போவதாக அறிவிக்கப்பட்டு, அதில் மக்கள் எதிர்ப்பு அதிகமாக இருந்த 10 கடைகள் அதிரடியாக மூடப்பட்டு விட்டன. இந்த நிலையில், மீதமுள்ள 6 கடைகள் எவை எவை என்ற கேள்வியும், அவற்றை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கையும் திருச்சி மக்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

நம்ம திருச்சி இன்சைட் பக்கத்தை பின்தொடரும் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்ஸ், தங்களது ஏரியாக்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளால் தினமும் சந்திக்கும் நரக வேதனைகளை கமெண்ட்களிலும் இன்மாக்ஸிலும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள். குறிப்பாக பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள், வியாபாரிகள் என பலரும் இந்த கடைகளால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் பொதுவிடங்களில் குடிகாரர்கள் செய்யும் அலப்பறைகளால் நிம்மதியிழந்து தவிப்பதாகக் கூறுகின்றனர். அரசு இன்னும் அந்த மீதமுள்ள 6 கடைகளின் அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிடாத நிலையில், நம்ம ஃபாலோயர்ஸ் கொடுத்த புகார்களின் அடிப்படையில் 10 முக்கிய இடங்கள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றன.

நம்ம ஃபாலோயர்ஸ் அதிகம் குற்றஞ்சாட்டும் அந்த 10 இடங்களின் பட்டியலில் புத்தூர் சிந்தாமணி ஷாப் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்த தென்னூர் ஹை ரோடு மற்றும் ஸ்ரீனிவாசா நகர் குடியிருப்பு பகுதி டாஸ்மாக் கடைகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அதேபோல் மேலப்புதூர், திருச்சி ஜங்ஷன் ஏரியா, எப்போதும் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் கருமண்டபம் பகுதி மற்றும் நெம்பர் 1 டோல்கேட் பகுதிகளில் இருக்கும் கடைகளால் பொதுமக்கள் காரசாரமான புகார்களை வாரி இறைத்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மதுராம் ஷாப், மரக்கடை அண்டர் பிரிட்ஜ் அருகிலுள்ள கடை மற்றும் அரியமங்கலம் ரைஸ்மில் பகுதி டாஸ்மாக் கடைகளும் இந்த லிஸ்ட்டில் அடங்கும்.

இந்த 10 சர்ச்சைக்குரிய இடங்களில், நம்ம ஃபாலோயர்ஸ் தினமும் சந்திக்கும் பிரச்சனைகளின் தீவிரத்தை வைத்துப் பார்த்தால், அரசு எந்த 6 கடைகளை முதலில் தேர்ந்தெடுத்து மூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மார்க்கெட் மற்றும் அண்டர் பிரிட்ஜ் பகுதிகளில் பொது இடங்களில் மது அருந்துபவர்களால் ஏற்படும் நியூசென்ஸ் மற்றும் டிராபிக் ஜாம், குடியிருப்பு பகுதிகளில் பெண்களின் பாதுகாப்புக்கு இருக்கும் அச்சுறுத்தல் ஆகியவற்றை அதிகாரிகள் முக்கியமாக கவனிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்த 10 இடங்களில் உள்ள மக்கள் குமுறல்களை ஏற்று, மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் 6 கடைகளை மாவட்ட நிர்வாகமும் டாஸ்மாக் அதிகாரிகளும் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த திருச்சி மக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyTasmac #TasmacClosure #PuthurSinthamani #ThennurHighRoad #SrinivasaNagar #GandhiMarket #Melaputhur #Karumandapam #No1Tolgate #Ariyamangalam #TrichyCity #PublicComplaint

Socials: Handles: @trichyinsight @trichynews