திருச்சியில் 71 ரவுடிகள் அதிரடி கைது: எஸ்பி ஆக்ஷன் | Trichy Insight

திருச்சியில் 71 ரவுடிகள் அதிரடி கைது: எஸ்பி ஆக்ஷன் | Trichy Insight

திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எஸ்பி செல்வ நாகரத்தினம் அதிரடி நடவடிக்கை. கடந்த 24 மணி நேரத்தில் 71 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது.

மே 22, 2026 அன்று இந்த அதிரடி செய்தி வெளியாகியுள்ளது. தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதலே சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் திருச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தற்போது அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.

முன்னதாக திருச்சி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள 364 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைக்கப்பட்டு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் அனிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் எஸ்பி செல்வ நாகரத்தினம் நேரில் பங்கேற்று இனி யாரும் குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்றும் அதையும் மீறி ஈடுபட்டால் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் எஸ்பியின் எச்சரிக்கையையும் மீறி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய குற்றவாளிகளை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. இதில் திருச்சி மாவட்டம் முழுவதும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 71 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேருக்கு எதிராக புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் பிணையில் வர முடியாத வகையில் 9 பிடி வாரண்டுகளும் அதிரடியாக நிறைவேற்றப்பட்டுள்ளன. ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிராக திருச்சி எஸ்பி செல்வ நாகரத்தினம் எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கை திருச்சி மாவட்ட பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இனி மாவட்டத்திற்குள் வாலாட்ட நினைக்கும் ரவுடிகளுக்கு இந்த கைது நடவடிக்கை ஒரு மரண பயத்தை காட்டியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyPolice #SPSelvaNagarathinam #RowdiesArrested #TrichyUpdate #LawAndOrder #TamilNaduPolice #CrimeNews #TrichyDistrict

Socials: Handles: @trichyinsight @trichyinsight