Trichy Power Cut Tomorrow June 6 Areas List | Trichy Insight
திருச்சி அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் நாளை சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 5, 2026: தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி சீரான மின்சாரம் வழங்குவதற்காக, மின்சார வாரியம் சார்பில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் பாதைகளில் இருக்கும் பழுதுகளை நீக்குவது, மரக்கிளைகளை அகற்றுவது மற்றும் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுவது போன்ற அத்தியாவசிய வேலைகள் செய்யப்படுவது வழக்கம். இந்த பணிகளின் போது ஊழியர்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் நாளை ஜூன் 6 ஆம் தேதி சனிக்கிழமை அன்று அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை இந்த சப்-ஸ்டேஷன் மூலமாக மின்சாரம் பெறும் ஏரியாக்களில் மின்தடை அமல்படுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் அத்தியாவசிய தேவைகள் மற்றும் தண்ணீர் பிடிக்கும் வேலைகள் இருந்தால் பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகளின் விபரங்கள் பின்வருமாறு. அரியமங்கலம், எஸ்.ஐ.டி, அம்பிகாபுரம், ரெயில்நகர், நேரு ஜிநகர், காமராஜ்நகர், மலையப்பநகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம்.ஜி.ஆர்.நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர், மேலகல்கண்டார்கோட்டை, கீழகல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வராநகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகர் ஆகிய இடங்களில் கரண்ட் இருக்காது.
மேலும் அரியமங்கலம் இன்டஸ்ட்ரியல் சிட்கோ காலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம், விண்நகர் மற்றும் அம்மன்நகர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நாளை காலை முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் முழுமையாக தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இந்த மின்தடை அறிவிப்பை கவனத்தில் கொண்டு தங்களது பணிகளை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyPowerCut #Ambikapuram #Ariyamangalam #Kattur #Ponmalai #TNEB #PowerShutdown #TrichyUpdates #LocalNewsTamil #TrichyDistrict
Socials: Handles: @trichyinsight @trichyinsight