Trichy Power Cut Tomorrow June 16 Areas List | Trichy Insight

Trichy Power Cut Tomorrow June 16 Areas List | Trichy Insight

திருச்சியில் நாளை (16.06.2026) செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தென்னூர் மற்றும் வரகனேரி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

15 ஜூன் 2026: திருச்சி மாநகரப் பகுதி பொதுமக்களுக்கான ஒரு முக்கிய மின் வாரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் திருச்சி நகரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நாளை (16.06.2026) செவ்வாய்க்கிழமை அன்று திருச்சியின் முக்கிய துணை மின் நிலையங்களான தென்னூர் மற்றும் வரகனேரி பகுதிகளில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னூர் துணை மின் நிலையப் பகுதிகள்:

தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விரிவு, அண்ணா பகுதி, காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர்பைபாஸ் ரோடு, தேவர்காலணி, தென்னூர் ஹைரோடு, ரஹ்மானியபுரம், சேக்ஸ்பியர், ராமராயர் அக்ரஹாரம், வடபழூர், வீரபாண்டியபுரம், வாசன் நகர், ஜீவாநகர், மதுரை ரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர்நகர், நந்தர்ஜாபால் நிவாசல், பழைய கட்டே ரோடு, மேலபுலிவார்டு ரோடு, ஜலால்கிரி தெரு, ஜலாலுதின் தெரு, குப்பாங்குளம், ஜார்ஜ் ராஜா தெரு, பெரியகடைவீதி, குப்பபஜார், சிங்காரதோப்பு, பாபு ரோடு, மதுரை நகர், பாரதியார் தெரு, சண்ணாம்புக்கார தெரு, சத்துக்கடை, கள்ளத்தெரு, அல்லித்தோட்டம் ரோடு, கீழதென்னூர் தெரு, சம்மேல்பட்டி ரோடு, பாரதி நகர், இதாயத் நகர், காயிதே மில்லத் ரோடு, பெரிய செட்டி தெரு, சின்ன செட்டி தெரு, பெரிய கம்மா தெரு, சின்ன கம்மா தெரு, நரக்கடை, பாண்டியபால் போர்ட் ஆபீஸ், வெல்லமண்டி, காந்தி மார்க்கெட், தஞ்சை ரோடு, கல்மண்டை, கூடி பஜார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

வரகனேரி துணை மின் நிலையப் பகுதிகள்:

மகாவெல்சாமி நகர், தனலெட்சுமி நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர், A.P. நகர், விஸ்வாஸ் நகர், வசந்த நகர், அவங்காதாம்பு, வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடி பஜார், பாரதி நகர், கலைய நகர், அண்ணுமுக காட்டன், P.S. நகர், பைபாஸ் ரோடு, வரகனேரி, பெரியார் நகர், பிச்சைகர், அருளானந்தபுரம், அண்ணாநகர், மல்லிகைபுரம், படையாச்சி தெரு, தர்மநாதபுரம், கல்லூக்காரத் தெரு, கான்ஸியான் மேட்டுத்தெரு, துறைசாமிபுரம், கீழபுதூர், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம் நகர், சங்கிலியாண்டபுரம், பாரதி தெரு, வள்ளுவர் நகர், ஆட்டுக்காரத் தெரு, மணல்வாரித்துறை ரோடு, இளங்கோ தெரு, காந்தி தெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளையார் நகர், பென்சினார் தெரு, லாட் தெரு, முஸ்லீம் தெரு, ஆனந்த தெரு, நித்தியானந்தபுரம், பருப்புக்கார தெரு, சன்னதி தெரு மற்றும் பஜனை கூடத்தெரு ஆகிய பகுதிகள்.

நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு திருச்சி நகரிய மின்சார வாரிய செயற்பொறியாளர் அன்போடு கேட்டுக் கொண்டுள்ளார்.

Hashtags: #TrichyInsight #TrichyNews #Trichy #PowerCut #PowerShutdown #TANGEDCO #Thennur #Varaganeri #ThillaiNagar #GandhiMarket #TrichyUpdates

Socials: Handles: @trichyinsight @trichyinsight