Trichy Power Cut Announcement for June 9 | Trichy Insight

Trichy Power Cut Announcement for June 9 | Trichy Insight

திருச்சி மாவட்டத்தின் முக்கிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜூன் 9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை முதல் மாலை வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 8, 2026. திருச்சி மாவட்டத்துல இருக்குற பொதுமக்களுக்கு எந்த ஒரு தடங்கலும் இல்லாம மின்சாரம் கொடுக்கணும்னு மின் வாரியம் அடிக்கடி மாதாந்திர பராமரிப்பு பணிகளை செஞ்சுட்டு வராங்க. இந்த பராமரிப்பு பணிகளோட ஒரு பகுதியா, நாளைக்கு செவ்வாய்க்கிழமை (09.06.2026) திருச்சி மாவட்டத்தோட முக்கிய துணை மின் நிலையங்கள்ல பழுது நீக்குறது மற்றும் மின் கம்பிகளை மாத்துற வேலைகள் ரொம்ப தீவிரமா நடக்க போகுது. இதனால நாளைக்கு காலைல 9.45 மணிக்கு தொடங்குற மின் தடை, மாலை 4 மணி வரைக்கும் நீடிக்கும்னு மின் வாரியம் அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க.

முக்கியமா திருச்சி பெட்டவாய்த்தலை மற்றும் சிறுகமணி ஆகிய துணை மின் நிலையங்கள்ல இந்த பராமரிப்பு பணிகள் நடக்குது. இதனால பெட்டவாய்த்தலை, பழங்காவேரி, பழையூர்மேடு, தேவஸ்தானம், நங்கவரம், கோட்டையார் தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய்யாமணி, நச்சலூர், தளிஞ்சி, சிறுகாடு, சங்கிலியாண்டபுரம், எஸ்.புதுக்கோட்டை, சிறுகமணி, பெருகமணி, சோழவந்தான்தோப்பு, திருமுருகன் நகர், காந்திபுரம், இனுங்கூர், சுக்காம்பட்டி, பாதிவயல்காடு, மாடுவிழுந்தான்பாறை, கவுண்டம்பட்டி, குறிச்சி, பாறைப்பட்டி, பங்களாபுதூர், கணேசபுரம், நடைபாளம் மற்றும் பணிக்கம்பட்டி ஆகிய ஊர்கள்ல நாளைக்கு பகல் நேரத்துல கரண்ட் இருக்காது. இதுமட்டும் இல்லாம சுத்துப்பட்டு கிராமங்களான வள்ளுவர் நகர், காமநாயகன்பாளையம், காவல்காரபாளையம், அந்தநல்லூர், ஜீயபுரம் மெயின் ரோடு, அனலை, திருப்பராய்த்துரை, எலமனூர், கொடியாலம், அம்மன்குடி மற்றும் முக்கொம்பு ஆகிய பகுதிகளிலும் மின்சார வினியோகம் முழுமையா நிறுத்தப்படும்.

அதேபோல அளுந்தூர் துணை மின் நிலைய எல்லைக்குள்ள வர்ற அளுந்தூர், சேதுராப்பட்டி, பாத்திமாநகர், சூறாவளிப்பட்டி, குஜிலியம்பட்டி, யாகபுடையான்பட்டி, கொட்டப்பட்டு, குமரப்பட்டி, களிமங்கலம், குன்னத்தூர், பிடாரம்பட்டி, சூரகுடிபட்டி, இ.மேட்டுப்பட்டி, மேல பச்சக்குடி ஆகிய இடங்களிலும் கரண்ட் கட் இருக்கும். முக்கியமா இந்த ஏரியால இருக்குற அரசு கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, ஐ.ஐ.ஐ.டி (IIIT) வளாகம் மற்றும் பள்ளப்பட்டி பகுதிகள்லயும் மின்சாரம் இருக்காதுன்னு சொல்லிருக்காங்க. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மற்றும் ஆபீஸ் போறவங்க உங்களோட அத்தியாவசிய தேவைகளை முன்னாடியே பிளான் பண்ணிக்கோங்க.

இதுபோக நம்ம திருவெறும்பூர் துணை மின் நிலைய பகுதிகள்லயும் நாளைக்கு பெரிய லெவல்ல பவர் கட் இருக்க போகுது. திருவெறும்பூர், சோழமாதேவி, மலைக்கோவில், தொழிற்பேட்டை, டி-நகர், பிரகாஷ்நகர், வேங்கூர், சோழமாநகர், போலீஸ் காலனி, புதுத்தெரு, கக்கன்காலனி, பர்மாநகர், நேருநகர், அண்ணாநகர், நவல்பட்டு, காந்தலூர், காவேரிநகர், பாரத்நகர் 100 அடி சாலை, பூலாங்குடி, பழக்கனாங்குடி, கும்பக்குடி, சூரியூர் மற்றும் எம்.ஐ.இ.டி. குண்டூர் ஆகிய பகுதிகள்ல மின் வினியோகம் இருக்காது. இப்போ வெயில் காலம் ரொம்ப அதிகமா இருக்குறதால வீடுகள்ல ஏசி, ஃபேன் பயன்பாடு ரொம்பவே அதிகம். அதனால தண்ணி பிடிக்கிறதுல இருந்து ஆன்லைன் வேலைகள் வரைக்கும் எல்லாத்தையும் காலையில ஒன்பதே முக்கால் மணிக்குள்ளாரவே பிளான் பண்ணி முடிச்சுக்கோங்க திருச்சி மக்களே.

Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyPowerCut #TNEB #TrichyUpdates #PowerShutdown #Thiruverumbur #Alunthur #TrichyLocalNews #TrichyDistrict #TNEBUpdates #Navalpattu

Socials: Handles

@trichyinsight @trichyinsight