திருச்சி மே 12 மின்தடை: அனைத்து பகுதிகளின் பட்டியல் | Trichy Insight
திருச்சி மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் மே 12 அன்று மின்தடை செய்யப்படவுள்ள அனைத்து இடங்களின் விரிவான பட்டியல் இதோ.
மே 10, 2026. திருச்சி மெயின்கார்டுகேட், கம்பரசம்பேட்டை மற்றும் ஸ்ரீரங்கம் துணை மின்நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர கால பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும் மே 12-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக மின்தடை ஏற்படும் அனைத்துப் பகுதிகளையும் விரிவாக கீழே காணலாம்.
மெயின்கார்டுகேட் மற்றும் கம்பரசம்பேட்டை பகுதிகளில்: கரூர் புறவழிச்சாலை, பழைய கரூர் சாலை, வி.என். நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித்தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோசப் சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டார் தெரு, நந்திகோயில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் திரையரங்க சாலை, கோட்டை ரயில் நிலைய சாலை, சாலை வீதி, வாத்துக்காரத் தெரு ஆகிய இடங்கள்.
மேலும் கம்பரசம்பேட்டை பிரிவில்: உறையூர் அரசு குடியிருப்பு பகுதி, கீரைக்கொல்லை தெரு, குறத் தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, திருத்தாந்தோணி சாலை, டாக்கர் சாலை, பஞ்சவர்ண சுவாமி கோயில், கந்தன் தெரு, மின்னப்பன் தெரு, லிங்க நகர், அகிலாண்டேசுவரி நகர், மங்கள் நகர், சந்தோஷ் கார்டன், மருதாண்டகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை ஆகிய பகுதிகள்.
முக்கிய குடிநீரேற்று நிலையங்கள்: கலெக்டர்வெல், பொன்மலை, எச்ஏபிபி மற்றும் ராம்நாடு குடிநீரேற்று நிலையங்கள். தேவதானம், சங்கரன்பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவி நகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி, ஒட்டகுடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், தோகூர் ஆகிய இடங்களிலும் மின்சாரம் இருக்காது.
ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் பகுதிகளில்: வடக்கு மற்றும் தெற்கு உள்வீதிகள், ஒத்தத்தெரு, அம்பேத்கர் நகர், பஞ்சக்கரை ரோடு, அருள்முருகன் கார்டன், ஏயுடீ நகர், ராகவேந்திரா கார்டன், டிரங்க் ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகர், மேலகொண்டையம் பேட்டை, சென்னை பைபாஸ் ரோடு, கல்லனை ரோடு, கீழக்கொண்டையம் பேட்டை, நடுக்கொண்டையம் பேட்டை, ஜெம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், வெங்கடேஸ்வரா நகர், தாகூர் தெரு, திருவெண்ணை நல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, நெ.1 டோல்கேட், எஸ்.எஸ்.நகர், பிச்சாண்டார் கோவில், கோகுலம் காலணி, வி.என்.நகர், ராஜா நகர், ஆனந்த நகர், தாளக்குடி, பழூர், பனமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும்.
Hashtags: #TrichyInsight #TrichyNews #PowerCutList #TrichyCity #Srirangam #Tollgate #ChatiramBusStand #ElectricityMaintenance #TrichyUpdate
Socials: Handles: @trichyinsight @trichynews