மெயின்டனன்ஸ் முடிஞ்சும் பவர்கட்! திருச்சி மக்கள் அதிருப்தி | Trichy Insight

மெயின்டனன்ஸ் முடிஞ்சும் பவர்கட்! திருச்சி மக்கள் அதிருப்தி | Trichy Insight

மாதாந்திர பராமரிப்பு பணி முடிந்த அடுத்த நாளே திருச்சியில் மீண்டும் மின்தடை மற்றும் லோ வோல்டேஜ் பிரச்சனை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

June 11, 2026. திருச்சி மாநகரின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மின்தடை பிரச்சனை பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக மின்சார வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு வேலைகளுக்காக ஒரு நாள் முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதேபோல நேத்து முன்தினம் தான் திருச்சி நகரின் முக்கிய இடங்களில் மெயின்டனன்ஸ் வேலைக்காக காலை முதல் மாலை வரை மின்சாரம் முழுமையாக கட் பண்ணாங்க. பராமரிப்பு பணிகள் முடிவடைந்தால் இனி தடையில்லாமல் சீரான மின்சாரம் கிடைக்கும் என்றுதான் பொதுமக்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அடுத்த நாளே திருச்சி வதுகாரத் தெரு மற்றும் வந்திகாரத் தெரு உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மறுபடியும் கடுமையான பவர்கட் பிரச்சனை தலைதூக்கியுள்ளது. மின்தடை ஒருபுறம் இருக்க பல வீடுகளில் லோ வோல்டேஜ் பிரச்சனை காரணமாக மின்சாதனங்கள் பழுதடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த கடுமையான கோடை வெயிலில் மின்சாரமும் இல்லாமல் லோ வோல்டேஜ் காரணமா ஃபேன் கூட ஓடாமல் மக்கள் நரக வேதனையை அனுபவித்து வருகிறார்கள்.

இதனால் கடும் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு எதிராக கேள்வி மேல கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு நாள் ஃபுல்லா கரண்ட்டை கட் பண்ணிட்டு அப்படி என்னதான்யா மெயின்டனன்ஸ் பார்த்தீங்க என்று மக்கள் நேரடியாகவே அதிகாரிகளை வெளுத்து வாங்கி வருகிறார்கள். முறையான பராமரிப்பு பணிகளை செய்யாமல் பெயரளவில் மட்டும் மின்சாரத்தை நிறுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருச்சியின் மையப்பகுதிகளில் நிலவும் இந்த தொடர் மின்தடை பிரச்சனைக்கு மின்சார வாரிய உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இல்லை என்றால் அடுத்தகட்டமாக மக்களை திரட்டி பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

Hashtags: #TrichyInsight #TrichyNews #TrichyPowerCut #TNEB #TrichyIssues #TrichyMaonagar #VathukaraStreet #PowerOutage #TamilNaduElectricity #TrichyUpdates #PublicProtest #LocalIssues

Socials: Handles: @trichyinsight @trichyinsight