Trichy Power Cut June 9: Check Full Areas List | Trichy Insight

Trichy Power Cut June 9: Check Full Areas List | Trichy Insight

திருச்சி மெயின்கார்டுகேட் மற்றும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையங்களில் நாளை (ஜூன் 9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் சத்திரம், உறையூர், ஜீயபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின் விநியோகம் இருக்காது.

June 08, 2026

திருச்சி மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு முக்கியமான அலர்ட். நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 09) திருச்சியின் மிக முக்கிய இடங்களான சத்திரம் பேருந்து நிலையம், உறையூர் மற்றும் ஜீயபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை முதல் மாலை வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. வீடுகளில் இன்வெர்ட்டர் சார்ஜ் செய்வது முதல் தண்ணீர்பிடித்து வைப்பது வரை அத்தியாவசிய வேலைகளை இன்றே பிளான் செய்துகொள்வது நல்லது.

திருச்சி நகரியம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் கா.முத்துராமன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மெயின்கார்டுகேட் 33 கி.வோ மற்றும் கம்பரசம்பேட்டை 110 கி.வோ ஆகிய இரண்டு முக்கிய துணை மின் நிலையங்களில் இந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் நாளை காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த சப்-ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் முற்றிலும் தடைபடும். பணிகள் சீக்கிரமாக முடிந்தால் மின்சாரம் முன்னதாகவே வழங்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெயின்கார்டுகேட் துணை மின் நிலைய பகுதிகளை பொறுத்தவரை கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால் மற்றும் பூசாரித் தெரு ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது. மேலும் சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டார் தெரு, நந்தி கோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன் ரோடு, சாலை ரோடு மற்றும் வாத்துக்காரத் தெரு ஆகிய பிஸியான கமர்ஷியல் ஏரியாக்களிலும் மின்தடை அமலில் இருக்கும்.

கம்பரசம்பேட்டை துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் வரும் உறையூர் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, திருத்தாந்தணி ரோடு, டாக்டர் ரோடு, P.V.S. கோவில், கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரிநகர், மங்களநகர் மற்றும் சந்தோஷ்கார்டன் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் நாளை பவர் கட் செய்யப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளான மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூட்டலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை, தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, அண்ணாசிலை, சஞ்ஜீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி, ஓட்டகுடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம் மற்றும் தோகூர் ஆகிய கிராமப்புற பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்படும்.

மிக முக்கியமாக கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், HAPP குடிநீரேற்று நிலையம் மற்றும் ராம்நாடு குடிநீரேற்று நிலையம் ஆகிய பிரதான குடிநீர் விநியோக நிலையங்களுக்கும் கம்பரசம்பேட்டை மூலமே மின்சாரம் வழங்கப்படுவதால் நாளை மாநகராட்சியின் சில பகுதிகளில் குடிநீர் விநியோகத்திலும் சிறு தடங்கல் அல்லது நேர மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Socials: #TrichyInsight #TrichyNews #TrichyPowerCut #TNEBTrichy #TrichyUpdates #NammaTrichy #ChathiramBusStand #Uraiyur #Jeeyapuram #TrichyCorporation #TrichyAlert #PowerCutAlert

@trichyinsight @trichyinsight