சர்வதேச அழகிப் போட்டியில் திருச்சி ரெஜினா கணேசன் சாதனை | Trichy Insight

சர்வதேச அழகிப் போட்டியில் திருச்சி ரெஜினா கணேசன் சாதனை | Trichy Insight

திருச்சியில் ஒருசிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த திருநங்கைகள் சமூகத்தையும் தப்பாக எடைபோடக் கூடாது என்பதை நிரூபிக்கும் வகையில் சர்வதேச அழகிப் போட்டியில் ரெஜினா கணேசன் ரன்னர்-அப் பட்டம் வென்றுள்ளார்.

July 2, 2026: கடந்த இரண்டு நாட்களாக நம்ம திருச்சியில் ஒருசில திருநங்கைகள் செய்த தவறான விஷயங்களைச் செய்திகளாகப் பார்த்து சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் ஓடிக்கொண்டிருப்பதை நாம் கவனித்திருப்போம். ஆனால், ஒரு சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த சமூகத்தையும் தப்பாக எடைபோடக் கூடாது என்பதை நிரூபிக்கும் வகையில், இப்போது திருச்சிக்கு சர்வதேச அளவில் ஒரு மிகப்பெரிய பெருமை கிடைத்துள்ளது. உலகளவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற மிஸ் அண்ட் மிஸ்டர் மெஜெஸ்டிக் இன்டர்நேஷனல் 2026 உலகளாவிய அழகிப் போட்டியில், திருச்சியைச் சேர்ந்த திருநங்கை ரெஜினா கணேசன் ரன்னர்-அப் அதாவது உலக அளவில் 2-வது இடத்தை வென்று ஒட்டுமொத்த இந்தியாவிற்கும், குறிப்பாக நம்ம திருச்சிக்கும் மாசான பெருமை சேர்த்துள்ளார்.

ஆண், பெண் மற்றும் திருநங்கை என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த சர்வதேச தரமிக்க போட்டியின் 2-வது பதிப்பு இதுவாகும். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திறமையாளர்களை ஒரே மேடையில் இணைக்கும் இந்த மெகா நிகழ்வில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய ரெஜினா கணேசன், பலகட்டத் தேர்வுகளின் அடிப்படையில் திருநங்கை பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ போட்டியாளராகத் தேர்வு செய்யப்பட்டார். ஜூன் 17 முதல் ஜூன் 28 வரை சர்வதேச அளவில் இந்த போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றன. அதிகாரப்பூர்வ கிரவுனிங் செரிமனியுடன் தொடங்கிய இந்த நிகழ்வில், போட்டியாளர்கள் அனைவரும் உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே வரலாறு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பெர்சனல் இன்டர்வியூ, செல்ஃப் இன்டர்வியூ, நேஷனல் காஸ்டியூம், ஸ்விம்சூட் மற்றும் ஈவினிங் கவுன் உள்ளிட்ட பல்வேறு கடுமையான சுற்றுகள் நடந்தன. ஒவ்வொரு சுற்றிலும் போட்டியாளர்களின் பொது அறிவு, தன்னம்பிக்கை, ஆளுமை மற்றும் மேடை நடை ஆகியவை மிக நுணுக்கமாக மதிப்பீடு செய்யப்பட்டன. இந்த போட்டியில் வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, அர்ஜென்டினா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டியாளர்கள் மிகக் கடுமையாக மோதினர். இவ்வளவு பெரிய டஃப் காம்பெடிஷனுக்கு நடுவிலும், திருச்சியின் ரெஜினா கணேசன் தனது அசாத்திய திறமையால் டாப் 7 இடத்திற்குள் முன்னேறி, பின்னர் டாப் 3-க்குள் நுழைந்து, இறுதியாக ரன்னர்-அப் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பின்னால் ஒரு பெரிய டீமே உழைத்திருக்கிறது. நேஷனல் டைரெக்டரான ரியானா சுரி, இந்திய ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்கா ஜாஸ்மின், ஆடை வடிவமைப்பாளர் ஆன்டனி, நகை அலங்காரக் குழுவான ட்ரான்ஸ் பிரைடல்ஸ், சென்னை ஜிங் புராடக்ட் மற்றும் எக்ஸ்ட்ரீம் டாட்டூ ஆகியோரின் பங்களிப்பும் ஆதரவும் ரெஜினாவின் இந்த சாதனைக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்துள்ளது. இந்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டிற்கான மிஸ் அண்ட் மிஸ்டர் மெஜெஸ்டிக் இன்டர்நேஷனல் 2027 போட்டிக்கான இந்திய ஆடிஷன்கள் இப்போதே அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டன. பாஸ்போர்ட், தகுதி மற்றும் சர்வதேச ஆளுமைத்திறன் அடிப்படையில் அடுத்த திறமையாளர்களை உலக மேடைக்கு கொண்டு செல்ல தேர்வுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தவறு செய்பவர்களைச் சுட்டிக்காட்டும் அதே வேளையில், இப்படி உலக அரங்கில் நம்ம ஊர் பேரை கெத்தா ஒலிக்க வைத்த ரெஜினா கணேசனை பாராட்டுவது திருச்சி மக்களின் கடமையாகும்.

Hashtags: #TrichyInsight #TrichyNews #ReginaGanesan #MissMajesticInternational2026 #TrichyPride #TransgenderPride #NammaTrichy #InternationalPageant #TrichyUpdate #ProudMoment #TamilNews

Socials: Handles: @trichyinsight @trichyinsight