Trichy Differently-Abled Man Burned to Death | Trichy Insight
திருச்சி திருவானைக்காவலில் மாற்றுத்திறனாளி ஒருவரைத் தாக்கி, அவர் சேர்த்து வைத்திருந்த பணத்தைப் பறித்துவிட்டு, அவரை உயிரோடு எரித்துக் கொலை செய்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
மே 11, 2026. திருச்சி திருவானைக்காவல் பகுதியில் மனதை உலுக்கும் ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருவானைக்காவல் தாகூர் தெருவைச் சேர்ந்தவர் வேம்படியான் மகன் வினோத்குமார் (35). மாற்றுத்திறனாளியான இவர், திருவானைக்காவல் கோயில் அருகே பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, வினோத்குமார் அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் பாதியளவு எரிந்த நிலையில் மீட்கப்பட்டதால், இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் (21), ராகுல் (23), ஸ்ரீதர் (20) மற்றும் இரண்டு சிறுவர்கள் காவிரியில் குளித்துவிட்டுத் திரும்பும்போது, வினோத்குமார் அங்கிருந்த சிறுவர்களுடன் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அந்த மூன்று இளைஞர்களும் வினோத்குமாரைத் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்போது அவரிடம் இருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பார்த்த இந்தக் கும்பல், ஆசையில் அந்தப் பணத்தைப் பிடுங்கிக் கொண்டது.
பணத்தைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் வினோத்குமாரை அறிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர் இந்தத் தடையத்தை மறைப்பதற்காக, சிறுவர்களை அனுப்பி பெட்ரோல் வாங்கி வரச் செய்து, வினோத்குமாரின் உடலில் ஊற்றித் தீ வைத்துள்ளனர். அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் போதே, அங்கிருந்த ஒரு பள்ளத்தில் போட்டுப் புதைத்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர். மறுநாள் அந்த வழியாக வந்த நாய்கள் சடலத்தைத் தோண்டியதை அடுத்து, செங்கல் சூளை உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் உடலைக் கைப்பற்றினர். தற்போது இந்த வழக்கில் ஸ்ரீராம், ராகுல், ஸ்ரீதர் மற்றும் 2 சிறுவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு சிறுவனைத் தேடி வருகின்றனர்.
Hashtags: #TrichyInsight #TrichyNews #CrimeNews #Srirangam #Thiruvanaikaval #JusticeForVinoth #TrichyCity #PoliceInvestigation #Arrested #BrutalMurder
Socials: Handles: @trichyinsight @trichynews