திருச்சியில் 100 ATM கார்டுகள், ரூ.10 லட்சம் பறிமுதல் | Trichy Insight

திருச்சியில் 100 ATM கார்டுகள், ரூ.10 லட்சம் பறிமுதல் | Trichy Insight

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.10 லட்சம் பணம், 50க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

July 6, 2026. திருச்சி கே.கே.நகர் காவல் எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு மிகப்பெரிய அதிரடி வேட்டை நடந்திருக்கு. திருச்சியில் சட்டவிரோத செயல்கள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சிட்டி போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் தீவிர சோதனைகள் நடந்து வருது. இதன் ஒரு பகுதியாக, கே.கே.நகர் சரக உதவி ஆணையர் ஜான் கென்னடி தலைமையிலான தனிப்படை போலீசார் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டாங்க. அப்போது அங்கிருந்த ஒரு வீட்டில் தங்கியிருந்த சில இளைஞர்களின் நடவடிக்கைகள் போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அந்த வீட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் தங்கி இருந்திருக்காங்க. போலீசார் அவங்ககிட்ட சாதாரணமா விசாரிச்சப்போ, முன்னுக்குப் பின் முரணான பதில்களை சொல்லி இருக்காங்க. ஆன்லைன் பிசினஸ் பண்றோம்னு மழுப்பலா பேசினதுனால போலீசாரோட சந்தேகம் இன்னும் அதிகமாச்சு. உடனே தனிப்படை போலீசார் அந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சு சல்லடை போட்டு சல்லடை போட்டு தேடி அதிரடி சோதனையை ஆரம்பிச்சாங்க. அப்போது அங்க மறைச்சு வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்த்து போலீசாரே ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டாங்க.

அந்த சோதனையில கணக்கில் வராத ரூ.10 லட்சம் ரொக்கப் பணம், 50க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வெவ்வேறு வங்கிகளின் ஏடிஎம் கார்டுகள் பிடிபட்டது. இதுமட்டுமில்லாம, அவங்க பயன்படுத்திய இரண்டு பைக்குகள் மற்றும் ஒரு காரையும் போலீசார் ஸ்பாட்டிலேயே பறிமுதல் செஞ்சாங்க. அவங்க சொன்ன ஆன்லைன் பிசினஸ் கதையை போலீசாரால சுத்தமா உறுதிப்படுத்த முடியல. இவ்வளவு ஏடிஎம் கார்டுகளும், மொபைல் போன்களும் ஒரு சாதாரண ஆன்லைன் பிசினஸ் பண்றவங்ககிட்ட இருக்க வாய்ப்பே இல்லைங்கிறது போலீசாரோட முதற்கட்ட கணிப்பு.

தற்போது அந்த 6 இளைஞர்களையும் போலீசார் கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் ரகசிய இடத்துல வச்சு தீவிரமா விசாரிச்சு வர்றாங்க. இந்த பணம் ஹவாலா நெட்வொர்க் மூலமா வந்ததா, அல்லது ஆன்லைன் பார்ட் டைம் ஜாப் ஸ்கேம், கிரிப்டோகரன்சி மோசடி போன்ற சைபர் கிரைம் குற்றங்கள்ல இவங்களுக்கு தொடர்பு இருக்கானு பல கோணங்கள்ல விசாரணை போயிட்டு இருக்கு. திருச்சியின் மையப்பகுதியில நடந்த இந்த பல லட்சம் பித்தலாட்ட விவகாரம் இப்போ அந்த ஏரியாவுல பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு.

Hashtags: #TrichyInsight #TrichyNews #Trichy #Subramaniapuram #KKNagar #TrichyPolice #PoliceRaid #CyberCrime #TrichyCrime #BreakingNewsTrichy #TrichyUpdates #LawAndOrder

Socials: Handles: @trichyinsight @trichyinsight