Rowdy Hariharan Arrested Under Goondas Act in Trichy | Trichy Insight
துவாக்குடியில் பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றும் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி ஹரிஹரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
May 06, 2026. திருச்சி துவாக்குடி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ரவுடி மீது மாவட்ட காவல்துறை கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. துவாக்குடிமலை வடக்குமலைப்பகுதியைச் சேர்ந்த சதிஸ்குமார் என்பவர் அங்குள்ள சாய் சாந்தி பெட்போல் பங்கில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சதிஸ்குமார் பணியில் இருந்தபோது அங்கு வந்த ஹரிஹரன் என்ற நபர் தகராறில் ஈடுபட்டுள்ளார். துவாக்குடி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான ஹரிஹரன் சதிஸ்குமாரை கையால் தாக்கியதுடன் தட்டிக்கேட்க வந்த பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சதிஸ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் ஹரிஹரன் தொடர்ந்து இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த ஹரிஹரனை சாதாரண சட்டப்பிரிவுகளில் வைப்பதை விட கடுமையான தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்தார்.
மாவட்ட எஸ்பியின் பரிந்துரையை ஏற்ற திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ரவுடி ஹரிஹரன் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ஆணை பிறப்பித்தார். இதற்கான ஆணை இன்று மே 6-ம் தேதி சிறையில் இருக்கும் ஹரிஹரனிடம் வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர் நீண்ட காலம் ஜாமீனில் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சியில் ரவுடியிசத்தை ஒடுக்க மாவட்ட காவல்துறை எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கை சமூக விரோதிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 2025 ஜனவரி மாதம் முதல் தற்போது வரை குற்றச்செயல்களில் ஈடுபட்ட மொத்தம் 43 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக துவாக்குடி, திருவெறும்பூர் போன்ற தொழில்பேட்டை பகுதிகளில் பொதுமக்களுக்கோ அல்லது வணிக நிறுவனங்களுக்கோ இடையூறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இதே போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. இத்துடன் 84B179D6-848E-4759-B7BF-E7E10ADFB753-removebg-preview_3.png கோப்பினை ஒரு சான்றாகக் கொள்ளலாம்.
Hashtags: #TrichyInsight #TrichyNews #Thuvakudi #RowdyArrest #GoondasAct #TrichyPolice #CrimeNews #TamilNews #PoliceAction #LawAndOrder #SafeTrichy #DistrictCollector
Socials: Handles: @trichyinsight @trichynews