தவெக திருச்சி கிழக்கு வேட்பாளர் சர்ச்சை | Trichy Insight

தவெக திருச்சி கிழக்கு வேட்பாளர் சர்ச்சை | Trichy Insight

திருச்சி கிழக்கு தொகுதி தவெக இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியலில் வாரிசு மற்றும் சிபாரிசு பெயர்கள் அடிபடுவதால், களத்தில் உழைத்த தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது.

ஜூன் 3, 2026. தமிழக அரசியலில் தவெக கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் வேளையில், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போதே பயங்கரமாக சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, தவெக சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் பட்டியலில் கு.ப.கி சிராஞ்சீவி, வெல்லமண்டி நடராஜன் அல்லது ஜவஹர்லால், மற்றும் ஜெகதீஸ் பழனிசாமி ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருப்பதாக கட்சி வட்டாரங்களில் ஒரு தகவல் பலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த செய்தி வெளியானது முதல் திருச்சியின் அடிமட்ட தவெக தொண்டர்கள் மற்றும் ஆரம்பகால நிர்வாகிகள் மத்தியில் ஒருவித குமுறலும் கொந்தளிப்பும் உருவாகியுள்ளது.

பல வருடங்களாக தளபதி விஜய்க்காக திருச்சியின் சந்து பொந்துகளிலெல்லாம் சொந்த காசை போட்டு போஸ்டர் ஒட்டி, கட்சியின் ஆரம்பக்கட்ட வளர்ச்சிக்கு ரத்தம் சிந்தி உழைத்த உண்மையான விசுவாசிகளை தவெக தலைமை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டுகிறதோ என்ற அச்சம் தற்போதைய கள நிலவரத்தில் வெளிப்படையாகத் தெரிகிறது. அனுபவமும் சீனியாரிட்டிரியும் முக்கியம்தான் என்றாலும், திடீரென வாரிசு அரசியலையும் பெரிய இடத்து சிபாரிசுகளையும் முன்னிறுத்தி சீட் கொடுக்க தலைமை கன்வின்ஸ் ஆகப் பார்க்கிறது என்பதுதான் தற்போதைய பிரதான குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் நீண்ட காலமாக தவெக மற்றும் ரசிகர் மன்றத்திற்காக உண்மையாக உழைத்த கரிகாலன், டேனி, சௌகத், ஜெரால்ட் போன்ற அடிமட்ட கிரவுண்ட் லெவல் மனிதர்கள் நெரையா பேர் இருக்கிறார்கள். கட்சிக்கு எந்த ஒரு பெரிய அரசியல் பின்புலமும் இல்லாத காலக்கட்டத்தில் இருந்து, கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகள் செய்த இவர்களைப் போன்ற உண்மையான உழைப்பாளிகளை தவெக தலைமை இந்த முக்கிய கட்டத்தில் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று தொண்டர்கள் வெளிப்படையாகவே கோரிக்கை வைக்கின்றனர்.

திருச்சி கிழக்கு தொகுதியை பொறுத்தவரை காந்தி மார்க்கெட், தில்லை நகர், பாலக்கரை என மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகள் நிறைந்த ஒரு மிக முக்கியமான களம். இங்கு வெறும் பிரபல முகங்களையோ அல்லது சிபாரிசு பின்னணி கொண்டவர்களையோ நம்பி களம் இறங்கினால் அது தேர்தல் முடிவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உழைத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தால் மட்டுமே தவெக திருச்சியில் வலுவான தடம் பதிக்க முடியும் என்பதே நடுநிலையான அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #TVK #Vijay #TrichyEastByElection #TamilNaduPolitics #TVKTrichy #ThalapathyVijay #TrichyPolitics #GroundReality #TVKUpdate #TrichyInsightExclusive

Socials: Handles: @trichyinsight @trichyinsight