திருச்சி தவெக-வில் திடீர் மல்லுக்கட்டு! | Trichy Insight

திருச்சி தவெக-வில் திடீர் மல்லுக்கட்டு! | Trichy Insight

திருச்சி கிழக்கு தொகுதியை கைபற்ற தவெகவின் புதிய வரவுகளும், கூட்டணி கட்சிகளும் போட்டு வரும் மாஸ்டர் பிளானால், ஆரம்பத்திலிருந்தே உழைத்த லோக்கல் நிர்வாகிகள் செம அப்செட்டில் இருக்கிறார்கள்.

July 4, 2026. தமிழக அரசியலில் தவெக களம் இறங்கியதில் இருந்தே ஏகப்பட்ட திருப்பங்கள் நடந்துட்டு வருது. அதுலயும் குறிப்பா நம்ம திருச்சி கிழக்கு தொகுதியில இப்ப நடக்குற உட்கட்சி அரசியல் தான் இப்போதைய ஹாட் டாபிக். ஆரம்பத்துல இருந்தே இந்த தொகுதியில எப்படியாவது சீட் வாங்கிடணும்னு தவெக லோக்கல் நிர்வாகிகள் பல குரூப்பா பிரிஞ்சு, தங்களுக்குள்ளேயே பயங்கரமா காய் நகர்த்திட்டு இருந்தாங்க. இப்பதான் ஒருவழியா லாரன்ஸ் மாஸ்டருக்கு நிலைமையை புரிய வச்சு, அவரு இங்க போட்டியிடலன்னு சொன்னதுக்கு அப்புறம் அப்பாடான்னு பெருமூச்சு விட்டுட்டு எல்லாரும் ஒண்ணா சேர்ந்து களத்துல இறங்க ரெடியானாங்க. ஆனா, அதுக்குள்ள இவங்களுக்கு செம ஷாக் கொடுக்குற மாதிரி புதுசு புதுசா பெரிய தலைகளோட என்ட்ரிகள் விழுந்துட்டு இருக்கு.

அதிமுகவுல இருந்து சமீபத்துல தவெகவுக்கு ரூட்டை மாத்துன முன்னாள் அமைச்சர் வளர்மதி, இப்போ திருச்சி கிழக்கு தொகுதியை வச்சு ஒரு பெரிய ஸ்கெட்ச் போட்டுட்டு இருக்காராம். இன்னொரு பக்கம் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கரோட சேர்ந்து தவெகவுல இணைஞ்ச அஜய் வாண்டையாருக்கு இந்த திருச்சி கிழக்கு தொகுதியை புக் பண்ணி கொடுத்துட்டுதான், அந்த இணைப்பு விழா வேலைகளையே அவங்கள் ஆரம்பிச்சதா ஒரு டாக் போய்ட்டு இருக்கு. இதனால காலம் காலமா கட்சிக்காக போஸ்டர் அடிச்சு, கிரவுண்ட் வொர்க் பண்ணுன திருச்சி தவெக நிர்வாகிகள் இப்போ தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காம போயிடுமோன்னு செம அப்செட்டுல இருக்காங்க.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் கூட்டணி கணக்குகளும் திருச்சி கிழக்கை பதம் பார்க்க ஆரம்பிச்சிருக்கு. சமீபத்துல ரெண்டு எம்எல்ஏக்களை திமுகவிடமே விட்டுட்டு, ரொம்ப ரிஸ்க் எடுத்து தவெக கூட்டணிக்கு வந்த மதிமுக, இப்போ பயங்கர சென்டிமென்ட் பிரஷர் கொடுக்குறாங்க. நாங்க விஜய்க்காகத்தான் திமுகவை எதிர்த்து இங்க வந்திருக்கோம்னு வைகோவும், துரை வைகோவும் தங்களோட மாஸ்டர் பிளானை எக்ஸிகியூட் பண்ணிட்டு இருக்காங்க. அவங்களோட மெயின் டார்கெட் என்னன்னா, மதிமுகவோட திருச்சி கிழக்கு முகமா இருக்குற டாக்டர் ரொகையா ஷேக்-ஐ இந்த தொகுதியில நிக்க வச்சு ஜெயிக்க வைக்கணும்ங்கிறதுதான்.

அப்படி ஜெயிச்சு வர்றவங்களை அமைச்சரவையிலயும் இடம் பெற வச்சு, கூட்டணியை ஸ்ட்ராங் ஆக்கணும்னு அவங்க தீவிரமா இருக்காங்க. இதனாலதான் மதிமுக இப்போ திமுகவுக்கு எதிரான தங்களோட எதிர்ப்பை இன்னும் பயங்கரமா அதிகப்படுத்தியிருக்காங்க. புதுசா வந்தவங்களும், கூட்டணி கட்சிகளும் இப்படி திருச்சி கிழக்கு தொகுதியை குறிவைச்சு ரவுண்டு கட்டுறதை பார்த்துட்டு, நாம கஷ்டப்பட்டு இங்க கிரவுண்ட் ரெடி பண்ணுனா இப்படி மொத்தமா வந்து அள்ளிக்கிட்டு போறாங்களே அப்படின்னு நம்ம லோக்கல் தவெக நிர்வாகிகள் இப்போ தங்களுக்குள்ளேயே முனுமுனுக்க ஆரம்பிச்சிருக்காங்க. இந்த திருச்சி கிழக்கு மல்லுக்கட்டுல கடைசி வரைக்கும் யாருக்கு லக் அடிக்கப்போகுதுன்னு பொறுத்திருந்துதான் பாக்கணும்.

Hashtags: #TrichyInsight #TrichyNews #TVKTrichy #TrichyEast #Vijay #Vaiko #DuraiVaiko #TrichyPolitics #TamilNaduPolitics #TVKAlliance #Valarmathi #TrichyLocalNews

Socials: Handles: @trichyinsight @trichyinsight